கர்நாடகாவில் பாஜக ஆட்சியை தக்கவைப்பதற்கான செயல்களில் டெல்லி தலைமை ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாஜக ஆட்சியை கர்நாடகாவில் தக்கவைக்க தமிழ்நாட்டிலும் சில சக்திகள் பாஜகவிற்கு உதவி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
அதில் குறிப்பாக நாளை பாஜகவிற்கு ஆதரவு வழங்க காங்கிரஸ்-மஜத கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் அணிமாறி வந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் பணத்திற்கு மேல் தமிழகத்தில் ஒரு பஸ் ரூட் குறைந்தபட்சம் (சேலத்திலிருந்து பெங்களூர், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி, கோவையிலிருந்து மைசூர் இப்படி பேருந்து தடங்களை) ஒரு எம்.எல் .ஏவுக்கு ஒரு பஸ் ரூட் வீீீீதம்் தரவிருப்பதாக பேச்சு தொடங்கியிருக்கிறது.
இந்த பஸ்ரூட்டை வழங்கவிருப்பது நமது முதலமைச்சர் எடப்பாடி என்பதுதான் அதிசயமாக இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக அரசை பாஜகவின் டெல்லி தலைமை தொடர்ந்து காப்பாற்றிவரும் நிலையின் விசுவாசமாக கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சியை காப்பாற்றுவதற்காக எடப்பாடிக்கு வந்த டெல்லி உத்தரவின்படி பஸ் ரூட் கொடுக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த பஸ் ரூட்டிற்காக இன்று காலை முதல் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பேருந்து தடத்தின் மார்க்கத்தை அதிகாரிகள் மூலம் மறைமுக ஆய்வு செய்து எந்தெந்த பஸ் ரூட்டை கொடுக்கலாம் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளநிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு நிலைக்க பாஜகவுக்கு விசுவாசமாக இருக்கும் எடப்பாடி தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைய இந்த செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சிக்கரமாக இருக்கிறது.