Skip to main content

அப்போலோ மருத்துவமனையால் நிகழ்ந்த மரணம்!

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

ஹேமநாதன் என்பவரின் அம்மாவும், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்ட்டர் கமலாநாதனின் மனைவியுமான பானுமதி. இவர் உடல் நலம் சரியில்லாமல் போனதால் அப்போலோ மருத்துவமனையில் 06.08.16 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார். 

 

apollo

 

அப்படி சேர்க்கப்பட்டவரை அப்போலோ தன்னுடைய ஆராய்ச்சிக்காக 250 நாட்கள் பயன்படுத்திக்கொண்டு சாகும் நிலையில் அத்துனை சொந்தங்களும் இருக்கும் பட்சத்திலும், ஒட்டுமொத்த மருத்துவ கட்டணத்தையும் பெற்றுக்கொண்டும். பானுமதியை 27.07.17  தேதி அன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனாதை என்று தூக்கி எரிந்தது அப்போலோ நிர்வாகம். இந்த விஷயத்தை நக்கீரன் ஆதாரத்துடன் வெளியிட்டது.
 

 
தற்போது இது தொடர்பாக நீதிமன்றம் சென்றபோது தனியாக ஒரு மருத்துவக் குழுவை நியமித்து அது உண்மையா என்று அறிக்கையை தரச்சொல்லி இருந்தது. இந்த நிலையி்ல் இன்னும் அதன்  அறிக்கையை தராமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதனைத் தொடர்ந்து பானுமதி மகன் ஹேமநாதனிடம் பல முறை அப்போலோ பேரத்தையும் நடத்தி பார்த்தது. ஒன்றும் நடக்காத நிலையில் கொலைமிரட்டல் விடுத்தது. அதையும் பொருட்படுத்தாமல் வழக்கை நடத்தி வரும் நிலையில் தன் தாயை தன் வீட்டிலேயே வைத்து பேணிக்காத்து வந்தார். தற்போது 6.05.19 இன்று அவர் உடல் அழுகிய நிலையில் மிக கொடூரமாக இறந்தார்.

 

banumathi

  
கடவுளுக்கு நிகராக நினைக்கப்படும் மருத்துவர்களே இப்படி ஆராய்ச்சிக்காகவும், பணத்திற்காகவும், படுமோசமாக நடந்துகொள்ளும் போது, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்