Skip to main content

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் ஆறுதல்!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Anbumani Ramadoss condolences to the Armstrong family

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு வீட்டிற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்ததோடு ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் வலைத்தளப் பதிவில்,  “கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும். காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அன்புமணி ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

சார்ந்த செய்திகள்