வழிகாட்டுக்குழு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று கே.பி.முனுசாமி எம்.பி., தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி, "தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்க முடியாது. அ.தி.மு.க.வுக்கு இரு தலைமை என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை; இதில் சசிகலா தலையிட தேவையில்லை. அ.தி.மு.க. வழிகாட்டு குழுவில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ. மாணிக்கம் பட்டியலினத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க. வழிகாட்டு குழு அதிகாரத்தை கட்சித்தலைமை முடிவு செய்யும்; குழு தன்னிச்சையாக செயல்பட முடியாது" என்றார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்க பா.ஜ.க. தயங்கும் நிலையில், கே.பி.முனுசாமியின் கருத்து அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.