Published on 11/12/2020 | Edited on 11/12/2020

அரசியல் கட்சித் தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாள் முதல் அவர் தொடர்ச்சியாக தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல், மாவட்ட நிர்வாகிகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், அர்ஜுன் மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.