வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் அனைத்து தலைவர்களும் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணியை செய்து வருகின்றனர்.
ஜீலை 23ந்தேதி காலை வேலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆளும் கட்சியான அதிமுக அமைச்சர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்ட தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என சுமார் 500 கார்களில் வருகை தந்துள்ளனர்.
இதற்கான ஆதாரம் உள்ளது. இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும் என திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளரான சம்பத், மாவட்ட தேர்தல் அலுவலரான சண்முகசுந்தரம் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளரான முரளிகுமாரிடம் புகார் தந்துள்ளார்.
கடந்த முறை திமுக தரப்பை நுணுக்கமாக கவனித்து செக் வைத்தார் ஏ.சி.சண்முகம். இந்தமுறை வழக்கறிஞர் அணியை களமிறக்கியுள்ள திமுக, ஏ.சி.சண்முகத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க துவங்கியுள்ளன.