பாராளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாநகர காவல்துறையில் முதல்கட்டமாக 28 காவல் ஆய்வாளர்களை தஞ்சாவூர், திருச்சி சரக காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் உத்தரவில் தெரிவித்திருப்பது, திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயா, அரியமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சேரன், விமான நிலைய ஆய்வாளர் மலைச்சாமி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிலிருந்து ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி, சைபர் கிரைம் ஆய்வாளர் சிந்துநதி, காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு ஆய்வாளர் அருள்ஜோதி, பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கார்த்திகா, உறையூர் குற்றப்பிரிவு மோகன், கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் சுலோச்சனா, ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் தஞ்சாவூர் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் கயல்விழி, மாநகர குற்றப் பதிவேடு காப்பக ஆய்வாளர் ராஜேந்திரன், நுண்ணறிவு பிரிவு (பாதுகாப்பு) முருகவேல், கண்டோன்மென்ட் ஆய்வாளர் சிவகுமார், மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கோசலை ராமன், உறையூர் ஆய்வாளர் ராஜா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதா, மாநகர குற்றப்பிரிவு 2வது பிரிவு ஆய்வாளர் சரஸ்வதி, ஸ்ரீரங்கம் ஆய்வாளர் அரங்கநாதன், காந்திமார்க்கெட் ஆய்வாளர் ரமேஷ், திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளர் கருணாகரன், பொன்மலை குற்றப்பிரிவு ஆய்வாளர் கார்த்திக் பிரியா, பாலக்கரை ஆய்வாளர் நிக்ஸன், தில்லைநகர் ஆய்வாளர் வேல்முருகன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அஜிம், கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன், கண்டோன்மென்ட் போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ், ஆயுதப்படை ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் திருச்சி சரகத்துக்கும் (புறநகர் பகுதிகள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்