Skip to main content

“20 சதவீத போனஸ் மற்றும் ஊக்கதொகை வழங்க வேண்டும்” நியாயவிலைக் கடைபணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

"20 percent bonus and incentive." Interview with K. Balasubramanian, Special President

 

 

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நியாயவிலைக் கடைபணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின்  சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். இதற்காக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஊதிய மாற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் கூட்டுறவுத் துறை மற்றும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கைகளை முறையாகப் பெற்று வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வுதியம் அறிவிக்கப்பட வேண்டும்.  குறைந்தபட்சம் ரூபாய் 10,000 என்ற அடிப்படையில் ஓய்வூதியம் இருக்க வேண்டும்.

 

கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கான இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக விழித்திரையை பயன்படுத்தி பொருட்களை வழங்குவதற்காக அரசு பரிசோதனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். வங்கி ஏ.டி.எம் மூலமாகவே ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

 

தீபாவளி போனஸ் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான முறையில் வழங்கப்பட வேண்டும். 20 சதவீத போனஸ் மற்றும் ஊக்கதொகை வழங்க வேண்டும்.  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் மூலமாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பும் போராட்டத்தை வைத்துள்ளோம்.  

 

அதனால் தமிழக அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்றார். மேலும் பயோமெட்ரிக் முறையை உணவுத்துறை அமைச்சர் முறையாக பரிசோதனை செய்து அமல்படுத்தாமல், அவசர அவசரமாக ஏற்படுத்திவிட்டார். அதனால் செல்ஃபோன் டவர் பிரச்சனை சர்வர் பிரச்சனை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. அதனால் விழித்திரையை பயன்படுத்தி உணவு பொருளை வழங்குவதற்கு சோதனை முறையில் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இவருடன் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரா ராஜா மாநில துணைத்தலைவர் துறை சேகர் சிதம்பரம் நகர நிர்வாகிகள் யோகராஜ் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Bonus notification for sugar factory workers

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி || ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

 

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்  பணிபுரியும் சுமார் 6103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  2022-2023  ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.415.30 லட்சங்கள் செலவினம் ஏற்படும்” என தெரிவிக்கபட்டுள்ளது. 

 

 

Next Story

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Bonus notification for Consumer Goods Corporation employees

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

 

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49 ஆயிரத்து 23 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.