Published on 25/10/2018 | Edited on 25/10/2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 3-வது நீதிபதி சத்தியநாராயணன் நீதிமன்ற அறைக்கு 10.15 மணிக்கு வருகை புரிந்தார். அங்கு பரபரப்பு நிலவியதை அடுத்து அதிரடி படை குவிக்கப்பட்டது. அதனை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார்.