தலைமைச் செயற்குழுவில் பங்கேற்றவர்கள் என்னவிதமான நிர்வாக மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அறிவாலய மேலிடத்தில் முதன்மைச் செயலாளர் பதவியில் டி.ஆர்.பாலுவுடன் கே.என்.நேருவையும் நியமிப்பது பற்றி ஆலோ சிக்கப்பட்டுள்ளது. திருச்சி பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தேர்த லில் தி.மு.க.வுக்கு முழுமையான வெற்றி கிடைக்கச் செய்ததற்காக நேருவுக்கு இந்த புரமோஷன் எனப் பேசப்பட்ட நிலையில், ஒரே பதவியில் இருவர் இருப்பதில் டி.ஆர்.பாலுவுக்குத் தயக்கம் இருந்ததால், அது பற்றி அடுத்த சில நாட்களில் முடிவெடுக்கலாம் என ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்திலும் அதிக இடங்களை தி.மு.க. வென்றுள்ள நிலையில், எ.வ.வேலு பெயர் பரிசீலனையில் இல்லாதது அவரது தரப்பை அப்செட்டாக்கியுள்ளதாம். நேருவுக்கு மாநில அளவிலான பொறுப்பு அளிக்கப்படும் பட்சத்தில் திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அன்பில் மகேஷ், முன்னாள் மேயர் அன்பழகன், வழக்கறிஞர் பாஸ்கர் ஆகியோர் பெயரும் மா.செ. பதவிகளுக்கு அடிபடுகிறது.
-மகி