Skip to main content

தமிழகத்தில் முதல் அமைச்சர் மாற்றமா? 

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

நாடாளுமன்ற தேர்தலில் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் தொகுதி உட்பட அதிமுக மிகக் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் அதிமுக தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. எனவே சொந்த சமுதாயத்தினரிடமே எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்துவிட்டார் என்பதையும், தன்னுடைய பகுதியில் தனக்கான செல்வாக்கு வலுவாக இருப்பதாகவும், மக்கள் ஈபிஎஸ் தலைமையைவிட தனது தலைமையையே மக்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டி, பாஜக தலைவர்களுக்கு தூதுவிட்டிருக்கிறாராம் ஓபிஎஸ். இதன்மூலம் முதல்வர் பதவியை கைப்பற்ற அவர் முயற்சித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  


  o panneerselvam edappadi palanisamy narendra modi




இதுதொடர்பாக விசாரித்தபோது, முதல் அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றுவதற்காக ஓ.பி.எஸ். தரப்பு டெல்லியிடம் பேசியதாக பேசியிருக்கிறார்கள். ஆனால் மாற்றத்திற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. 

 

எதிர்காலத்தில் அதிமுகவை பாஜக கைப்பற்றுவதற்காக, கொடநாடு தொடர்பான வழக்கு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி வழக்கு தொடர வாய்ப்புகள் இருக்கிறது. அப்போது ஓ.பி.எஸ். மாற்றம் வரலாம். வேறு மாற்றங்களும் வர வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது முதல் அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. 


 

இன்று உள்ள சூழ்நிலை என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி தனக்குள்ள ஆட்சியை தக்க வைக்க தேவையான உறுப்பினர்களை உறுதிப்படுத்திக்கொண்டார். அதற்காக அவர் இடைத்தேர்தல் நடக்கக்கூடிய தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தன்னை கைக்கூப்பி வணக்கம் வைக்கக்கூட யாரும் இல்லாத இடத்தில் கூட அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருந்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது என்றால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம்தான். தேர்தல் பிரச்சாரத்தின்போது எனது அரசியல் பயணம் இனிதான் ஆரம்பம், இனிதான் எடப்பாடி பழனிசாமியை பார்ப்பீர்கள் என்றார். அதன்படியே தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
 

 


 

சார்ந்த செய்திகள்