பல்வேறு சிக்கல்களில் இருக்கும் எடப்பாடி, சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சமாதானத் தூது விடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, தனக்கான ஒரு இடத்தை அதிமுகவில் வைத்துக்கொண்டு, மற்ற மந்திரிகளுக்குக் கெடுபிடி காட்டும் எடப்பாடி மீது அதிருப்தி அதிகமாகியிருப்பதாகக் கூறுகின்றனர். செங்கோட்டையன், விஜயபாஸ்கர், உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும், செப்டம்பர் மாதம் போல் ரிலீஸாக இருக்கும் சசிகலாவை வரவேற்கக் காத்திருக்கிறார்கள் என்று சொல்கின்றனர்.
இதைத் தெரிந்துகொண்ட எடப்பாடி, அவர்களுக்கு முன் சசியிடம் தூது விடவேண்டும் என்ற எண்ணத்தில், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஒரு தகவலை அனுப்பி இருக்கிறாராம். அந்தத் தகவலில் சசிகலா மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்றும், சசிகலா வெளியே வந்ததும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் நாற்காலியில் சசிகலா தான் அமரவேண்டும்’ என்றும் எடப்பாடி பழனிசாமி விரும்புவதாகச் சொல்கின்றனர்.