Skip to main content

முதல்வருக்கு அன்பளிப்பு கொடுத்த மேயர்! அபராதம் கட்டிய பரிதாபம்!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.இந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை, கடந்த ஜூலை 30-ஆம் தேதி, பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜூனா சந்தித்தார். 
 

bjp



இந்த சந்திப்பின் போது பெங்களூரு மேயர், எடியூரப்பாவிற்கு பிளாஸ்டிக் கவர் அடங்கிய கூடையில் பழங்களை வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகாவில் 2016ல் இருந்து பிளாஸ்டிக்கிற்கு தடை இருக்கும் போது மேயர் எப்படி பிளாஸ்டிக் பயன்படுத்தலாம் என்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மேயர் தாமாக முன்வந்து நேற்று பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்கான அபராதம் ரூ.500-ஐ செலுத்தினார். இதற்கான ரசீதும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ரசீதும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

சார்ந்த செய்திகள்