சந்திரபாபு நாயுடு-ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருவதால் ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளி, ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது தகுதியை மீறி செயல்படுவதாக தெலுங்கு தேசம் குற்றச்சாட்டியுள்ளது. சந்திரபாபு நாயுடு பேசும் போது, தெலுங்குதேசம் கட்சியை பற்றியும். என்னை பற்றியும் மிகவும் கேவலமாக பேசி வருகிறார். நான் 35 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கிறேன். இப்படி ஒரு அவல நிலையை இதற்கு முன்பு பார்த்ததில்லை. தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவதை கேட்டால், கடந்த முறை நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது கழுதை மேய்த்தீர்களா என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்கிறார்.
அமைச்சர் ஒருவர் எப்போதும் பிணத்தை போல் இருக்கிறீர்களே என்று கூறுகிறார். வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் கூறுகிறார். ஆனால் யாருக்கு வழக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. முதல்வருக்கு எந்தவிதமான ஞானமும் இல்லை. அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது" இவ்வாறு கூறினார். ஜெகன் மோகன் ரெட்டி பேசும் போது, விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. எங்களிடம் இருக்கும் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று தெரியாது என்று ஜெகன் கூறினார்.