!['' I do not want to be the reason for that '' - Interview with Minister Senthil Balaji!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y5sWKovf5nxtu5KhjlmK2JlAvoKd2AFE9WI6JVnl9_M/1643635769/sites/default/files/inline-images/0028_0.jpg)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கூட்டணி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலிருந்து கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசமாக வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக கரூர் எம்.பி ஜோதிமணி ஆவேசமாக வெளியேறினார்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்பாலாஜி, 'நடந்த சம்பவங்களுக்குள் போகவேண்டாம் என நினைக்கிறேன். நானும் அது சம்பந்தமாக பேச விரும்பவில்லை. இன்றைய நாளை பொறுத்தவரை தேர்தலுக்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களை சொல்லி அதற்கான சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் வேற மாதிரி நிகழ்வுகளை உருவாக்குவதற்கு நான் விரும்பவில்லை'' என்றார்.