
பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சாதிக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இப்புகார் மனு குறித்து அவர்கள் கூறும்போது, "பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா தமிழகத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை ஒருமையில் பேசி அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார். எனவே எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்கள்.
எச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் கருத்து தெரிவித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.