விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக தங்களின் வேட்ப்பாளர்கள் பெயர்களளை இன்று காலை அறிவித்தது.
விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளர் பெயர் முத்தமிழ்செல்வன் ஆவார். இவர் பலவருடங்களாக அதிமுகவில் இருக்கிறார். விவசாயம் செய்து வரும் இவர் காணை பகுதியில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் 1997 முதல் 2015 வரை ஒன்றிய பேரவை செயலாளர் ஆக இருந்துள்ளார். 2011 முதல் 2016 வரை காணை ஒன்றிய செயலாளராக பதவி வகித்துள்ளார்.
முத்தமிழ்செலவன் இந்த வாய்ப்பை பலரை தாண்டி தான் பெற்றுள்ளார். சிந்தாமணி வேலு, அக்கட்சியின் பொது குழு உறுப்பினர் எசாலம் பன்னீர்செல்வம், து.ரவி. சுப்ரமணியன் உட்பட 90 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளரான லட்சுமணன் அவர்களுக்கும் இபிஎஸ் அமைச்சரவையில் உள்ள சி வி சண்முகம் அவர்களின் ஆதரவை பெற்ற முத்தமிழ்செல்வனுக்கும் கடும் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.
இபிஎஸ் ஆதரவு, சி வி சண்முகம் ஆதரவு இரண்டும் முத்தமிழ்செல்வன் மேல் இருந்ததால் இந்த வாய்ப்பு இவருக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் உட்கட்சிப்பூசல் இன்னும் தொடர்ந்து வருவதாக தொண்டர்கள் இடையே சந்தேகம் வருகிறது. உட்கட்சிப்பூசல் இருந்தாலும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். வெற்றி பெறுவதற்க்கு பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை பெரிதும் நம்பியுள்ளார்.