Published on 27/06/2019 | Edited on 27/06/2019
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும் ஒரே கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்களா இருந்தபோதும் தன்னை விட அமைச்சர் தங்கமணிக்குதான் எடப்பாடி அதிக முக்கியத்துவம் கொடுக்கறார்ன்னு நினைக்கிறார் வேலுமணி. இதுக்கிடையில், சென்னை மாநகராட்சியின் மூன்று மண்டலத்தைச் சேர்ந்த குப்பைகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து வருகிறது. இதேபோல் சென்னையின் 15 மண்டலத்தின் குப்பைகளை அள்ளும் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கான காண்ட்ராக்ட்டை உள்ளாட்சித்துறை கையில் வச்சிருக்கு. இதைத் துறை அமைச்சரான தானே தன் ஆட்கள் மூலம் ரகசியமா எடுத்துச் செய்ய நினைச்சார் வேலுமணி.
ஆனால் எடப்பாடி, அதுக்கு செக் வச்சுட்டார். காரணம், எடப்பாடி மீது மோடிக்கு நம்பிக்கை இல்லைங்கிறதைத் தெரிஞ்சிக்கிட்ட வேலுமணி, எடப்பாடிக்கு பதில் என்னை முதல்வராக்குங்கள்ன்னு ஜக்கி வாசுதேவை பா.ஜ.க. தரப்பிடம் தூது விட்டாராம். இது தெரிஞ்சதாலதான் காண்ட்ராக்ட் விஷயத்தில் எடப்பாடி கறார் காட்டினாராம். இதனால் எடப்பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமா ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை வேலுமணி வாபஸ் வாங்கினாராம். அதேபோல் சர்வதேச குதிரைச் சவாரிப் போட்டியில் வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த வீரர்களான சரவணன், சபரி, அவந்திகா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடியை சந்திச்சி ஆசிபெற நினைச்சப்ப, அவங்களை அமைச்சர் தடுத்து விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அமைச்சருக்கும், முதல்வருக்குமான உரசல் அதிகமாகி கொண்டிருக்கிறது என்று ஆளும் தரப்பு தெரிவிக்கிறது.