Published on 02/07/2019 | Edited on 02/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பாஜக கைப்பற்றியது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களவை சபாநாயகராக ஓம்.பிர்லா தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவையில் சபாநாயகர் இல்லாத சில சமயங்களில் உறுப்பினர்களில் ஒருவர் நாடாளுமன்ற அவையை நடத்துவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் நீலகிரி தொகுதி எம்பியும், திமுகவைச் சேர்ந்தவருமான ஆ ராசா நேற்று சிறிது நேரம் அவையை வழி நடத்தினார்.
அப்போது கேரளாவின் மாவேலிக்கரை எம்பி சுரேஷ் கொடிகுனில் தொகுதி பிரச்னை தொடர்பாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராசா நேரம் முடிந்துவிட்டதாகவும் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு சுரேஷ் கொடிகுனில் மிக முக்கிய பிரச்னை, அமைச்சர் அப்புறம் பதில் அளிக்கட்டும் என்று ராசாவுக்கு பதில் சொல்லிவிட்டு பேசிக்கொண்டே இருந்தார். மக்களவையில் சமீப காலமாக திமுக எம்.பி.களுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.