Published on 17/11/2020 | Edited on 17/11/2020

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 16.11.2020 காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், சென்னை கிழக்கு மாவட்டம், அ.ம.மு.க. பேரவை கொளத்தூர் பகுதி செயலாளர் கங்கா சுரேஷ் தி.மு.க.வில் இணைந்தார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.நாகராஜன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சாக்ரடீஸ், கொளத்தூர் மேற்கு பகுதி துணை செயலாளர் டில்லி ஆகியோர் உடனிருந்தனர்.