Skip to main content

அதிமுகவில் விரைவில் நிகழப் போகும் அதிரடி மாற்றம்!ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு அதிமுக அரசு மீதான அதிருப்தியும், பாஜகவிற்கு எதிரான மனநிலையும் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் இரட்டை தலைமை இருக்க கூடாது என்று குரல் அதிமுக கட்சிக்குள் வெடித்தது. இந்த பிரச்சனையை உற்று கவனித்து வரும் பாஜக தலைமை. இதற்கு தீர்வு காண்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று கூறுகின்றனர். இனி வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி தலைமை வலிமையனவராக இருக்க வேண்டும் என்றும் பாஜக கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் வெகு விரைவில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அறிவிப்பு வரும் என்று கூறுகின்றனர். 
 

admk



இதன் காரணமாகவே சசிகலாவை விடுதலை செய்யும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சசிகலா விடுதலையானால் அதிமுக கட்சிக்கு அவரை தலைமை ஏற்க பாஜக மற்றும் எடப்பாடி தரப்பு நினைப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தெரிந்த பின்னர் தான் ஓபிஎஸ் டெல்லி சென்று பாஜக தலைமையிடம் ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்கின்றனர். சசிகலா விடுதலையாகி அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் ஓபிஎஸ் தரப்புக்கு அதிமுகவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க. அணிகள் எல்லாமும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக சசிகலாவை பாஜக அணுகியிருப்பது சசிகலா தரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்