நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது.இதனால் அதிமுக அமைச்சர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலரும் இந்த படு தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று கூறிவந்தனர்.இதனால் அதிமுக,பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் அமித்ஷாவிடம் இருந்து தமிழக ஆளுநருக்கு அழைப்பு வந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் தேர்தலின் போது அதிமுக கட்சியினர் இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும்,நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்தாமல் போனதும் தோல்விக்கு காரனம் என்று பாஜக தலைமையிடம் கவர்னர் கூறியதாக தகவல் வருகின்றன.மேலும் சில அமைச்சர்கள் மீது வந்துள்ள ஊழல் புகார்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய சில கோப்புகளை அமித்ஷாவிடம் பன்வாரிலால் புரோஹித் கொடுத்துள்ளார்.

அதில் முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இதனால் அமைச்சர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.தேர்தலின் போது திமுக அடைந்த வெற்றிக்கு காரணமான சில விஷயங்களையும் அமித்ஷாவிடம் கவர்னர் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.