காவலர் பணிக்கான தேர்வில் முறைகேடில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![Uttarpradesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/9Y9W8wy-vo_wfznO-V9UG6TtE6k7ngfbax6kog6qxR0/1533347636/sites/default/files/inline-images/Up.jpg)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மிகப்பெரிய காவலர் தேர்வானது மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வானது அம்மாநிலத்தில் உள்ள 56 மாவட்டங்களில் 860 மையங்களில் வைத்து நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் மூலம் 41 ஆயிரத்து 520 காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்நிலையில், இரண்டு நாட்கள் நடக்கும் இந்தத் தேர்வு இன்று தொடங்கியது. இதில் முறைகேடு வேலைகளில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிறப்பு அதிரடி படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கோரக்பூரில் 11 பேர் மற்றும் அலகாபாத்தில் 5 பேர் என தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசூல்ராஜா படத்தில் வருவதைப் போல, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது, போலி அடையாள அட்டைகள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் உபயோகப்படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். இவர்களில் வழக்கறிஞர் ஒருவரும் அடக்கம். நாளையும் தேர்வு நடக்கவுள்ளதால், முறைகேடுகள் நடக்காதவண்ணம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.