![The police chased the students away from the park by cutting the classes!](http://image.nakkheeran.in/cdn/farfuture/em9Li-0NCGs09RGksoycZ3rNU_B04MGVEgZxxdgr5Ag/1663348048/sites/default/files/2022-09/z135.jpg)
![The police chased the students away from the park by cutting the classes!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Lf0_rD9FZ4EwuPddzhaY9sZG1wY2g81loTrjs0-L-Ms/1663348048/sites/default/files/2022-09/z137.jpg)
![The police chased the students away from the park by cutting the classes!](http://image.nakkheeran.in/cdn/farfuture/7us5uKqhUWIvn-_bor8qPq_X5bdPYNdxTRU2_SZCpiM/1663348048/sites/default/files/2022-09/z136.jpg)
புதுச்சேரி சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு மையத்தில் இருக்கிறது பாரதி பூங்கா. இங்கு காலை வேளையில் மக்கள் நடை பயிற்சி செய்வதும், அதன் பிறகு சுற்றுலா பயணிகள் வருவதும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் இளைப்பாறுவதுமாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பூங்காவுக்குள் வந்து புகைப்பிடிப்பது தொடர்கிறது.
இதற்காக நகராட்சி ஊழியர்கள் மாணவர்களை விரட்டியும் போலீசார் அடிக்கடி ரோந்து வந்தும் துரத்துகின்றனர். இந்தநிலையில் இன்று காலை 10 மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து புத்தகப் பையுடன் பூங்காவிற்குள் வந்து அமர்ந்து புகை பிடித்தனர். இத்தகவல் அறிந்த பெரியகடை போலீசார் விரைந்து வந்து அனைவரையும் விரட்டி பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து அவர்களை அந்தந்த பள்ளியில் போலீசார் இறக்கி விட்டு பள்ளியில் நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்தனர்.
பள்ளி நேரத்தில் மாணவர்கள் பூங்காக்களுக்கு வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.