Skip to main content

'பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை அனுமதிக்க முடியாது'-மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Published on 18/09/2023 | Edited on 18/09/2023
'Plaster of Paris Ganesha idols cannot be allowed' - Supreme Court dismisses petition

 

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நெல்லையில் வட மாநிலத்தவர் ஒருவர் செய்த விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இரசாயனங்கள் வைத்துத் தயாரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அந்த சிலை தயாரிக்கும் இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இருந்த அரங்கத்தை மூடி சீல் வைத்தனர்.

 

இதனால் அந்த சிலையை உற்பத்தி செய்த வடமாநில குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். இந்நிலையில் விநாயகர் சிலையை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்ற அந்த நபர் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தாமிரபரணி ஆறு மாசடைந்துள்ளது. இந்நிலையில் கெமிக்கல் கலந்த சிலைகளை நீர்நிலையில் கரைக்கக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. சிலைகளை விற்பனை செய்யலாம். ஆனால் அந்த சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது. அவரிடம் இருந்து யார் யாரெல்லாம் சிலைகள் வாங்கினார்கள் என்பது தொடர்பான முழு முகவரிகளை வாங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிலைகளைக் கரைக்க எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

'Plaster of Paris Ganesha idols cannot be allowed' - Supreme Court dismisses petition

 

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 'எந்த வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தாலும் அந்த விநாயகர் சிலை அனுமதிக்கப்படாது. வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு இத்தகைய சிலைகளை தயாரிப்பதற்கான அனுமதி கூட கிடையாது' என தமிழக அரசு பதிலளித்தது. அதனைத் தொடர்ந்து 'பொது நீர்நிலைகளில் ரசாயனம் கலந்த சிலைகள் கரைக்க அனுமதிக்க முடியாது என்பது சரியானதுதான்' என கருத்து தெரிவித்து மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விநாயகர் சிலைகள் தொடர்பான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.