Skip to main content

மம்தா இனிப்புகள் அனுப்புவார், ஒபாமா அறிவுரை கூறினார்- மோடி சுவாரசிய பேட்டி...

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இன்று காலை ஏ.என்.ஐ நிறுவனத்திற்காக சிறப்பு பேட்டி ஒன்றை எடுத்தார். மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் இல்லாமலா மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

 

modi interview with akshay kumar

 

 

அப்போது பேசிய அவர், "நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. அதுமட்டுமல்ல நான் எம்.எல்.ஏ ஆவதற்கு முன் என்னிடம் வாங்கி கணக்கு கூட கிடையாது.

சிறுவயதிலேயே நான் எனது தாயை விட்டு பிரிந்து தனியாக வந்து விட்டேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. ஆனால் நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.

இப்போது மக்கள் என்னிடம் எப்படி கோவப்படாமலேயே இருக்கிறீர்கள் என கேட்கின்றனர், கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்வதில்லை என்பதே அதன் காரணம். மேலும் இப்போதும் எதிர்க்கட்சிகளின் எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். உதாரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் எனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவார்.

பலர் என்னிடம் அதிக நேரம் தூங்குங்கள் என்று கூறினார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூட கூறினார். ஆனால்,  3 - 4 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் எனக்கு தேவையில்லை" என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்