Published on 24/03/2020 | Edited on 24/03/2020
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டு மக்களிடம் மீண்டும் இன்று (24/03/2020) இரவு 08.00 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில் பிரதமர் பேசுகிறார். ஏற்கனவே கடந்த 19- ஆம் தேதி இரவு 08.00 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.