Skip to main content

இந்தியா - இங்கிலாந்து போட்டி மேட்ச் பிக்சிங்கா? 

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடியது. ஆனால் இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஜோடி விளையாண்ட விதம் பெரிய விமர்சனத்தையும், சர்ச்சையும் கிளப்பியது. 
 

india




இந்திய அணி தோல்வி குறித்து பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதற்க்கான வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் ஆதங்கம் அடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியா-இங்கிலாந்து போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக தங்களது வெறுப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்