Published on 21/06/2019 | Edited on 21/06/2019
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலியாகியுள்ளனர்.
![himachal pradest bus accident costs 44 lives](http://image.nakkheeran.in/cdn/farfuture/b-SkZc9aRIQX1tLEbeiiY-CPFiTy6nhzEAZ0DND3hIs/1561094924/sites/default/files/inline-images/buss.jpg)
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள பஞ்ஜார் என்ற பகுதியில் இருந்து கடகுஷானி என்ற மலைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து கோர்ச் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.
விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயம் அடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான பயணிகளை பேருந்திற்குள் ஏற்றிச்சென்றதே பேருந்து பள்ளத்தில் கவிழ காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஹிமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.