Published on 19/01/2022 | Edited on 19/01/2022

ஆரோவில் பவுண்டேஷனின் 58-வது ஆட்சிமன்றக்குழு கூட்டம் தமிழக ஆளுநரும், ஆரோவில் சேர்மனுமான ஆர்.என்.ரவி தலைமையில், ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஆட்சி மன்றக்குழு செயலர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆரோவில் பகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆரோவில் வளர்ச்சித் திட்டப் பணிகள் என்ற பெயரில் அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.