Skip to main content

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

cea subramanian

 

இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து வந்தவர் கே சுப்பிரமணியன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தனது மூன்று ஆண்டுகாலம் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சுப்பிரமணியன், கல்வித்துறைக்குத் திரும்பவுள்ளதாகத் தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்திடமிருந்து தனக்கு பெரும் ஆதரவு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நயன்தாரா- விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

 

"An explanation will be taken from Nayantara- Vignesh Sivan"- Minister M. Subramanian interview!


சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறதா என்பது குறித்து நாளை (11/10/2022) சென்னையில் ஆலோசனை நடத்தப்படும். ஆலோசனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், அதிகாரிகளிடம் மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறதா என விளக்கம் கேட்கப்படும். அரசு மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு நிலவரத்தை இணையதளம் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம். 

 

அதிகாரிகள் விடுப்பில் சென்றால் குடோன்களில் இருந்து மருந்துகளை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படலாம். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம். திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே வாடகை தாய் மூலமாக குழந்தைப் பெற முடியும். பொது சுகாதாரத்துறையின் சார்பில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டையை 21 முதல் 35 வயதுடையவர்கள் வழங்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் நியமனம்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Tamil appointed Chief Economic Adviser to Central Government

 

மத்திய அரசுக்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனை வழங்கி, வழிநடத்தும் மிக முக்கிய பதவியில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்பிரமணியன், கடந்த டிசம்பர் மாதம் பதவியில் இருந்து விலகி இருந்த நிலையில், அந்த இடத்திற்கு அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

இன்று (29/01/2022) பதவியேற்க உள்ள அனந்த நாகேஸ்வரன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகிப்பார். 

 

2022- 2023 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  அனந்த நாகேஸ்வரன் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவியில் நியமிக்கும் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 

 

அகமதாபாத் ஐ.ஐ.எம். முதுநிலை பட்டதாரியான அனந்த நாகேஸ்வரன், பல புகழ்பெற்ற சர்வதேச பொருளாதார அமைப்புகளில் முக்கிய பதவி வகித்துள்ளார். உலகெங்கும் பொருளாதாரத்தின் போக்கை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

 

பொருளாதார நிபுணர், பேராசிரியர், புத்தக ஆசிரியர், ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்ட 60 வயதான அனந்த நாகேஸ்வரன் மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகர்களாக இருந்த ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், கே.சுப்பிரமணியன் ஆகியோரும் தமிழ்நாட்டைப பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தமிழர்களின் பெருமைமிகு பட்டியலில் இணையும் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரான முனைவர் வி.அனந்த நாகேஸ்வரனுக்கு தமிழர்கள் அனைவரோடும் சேர்ந்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.