Skip to main content

போபால் விஷவாயு வழக்கில் மக்களுக்காக போராடிய அப்துல் ஜபார் மறைவு

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

1984ஆம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த விஷவாயுக் கசிவு காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்தனர். இந்த யூனியன் கார்பைடு விஷவாயு வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காகவும், உயிர் பிழைத்தவர்களுக்காகவும் களத்தில் நின்று போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜபார், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
 

l



மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அப்துல் ஜபார், அண்மை காலமாகவே கடும் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் சமீப காலமாக அவரது கண் பார்வையும் மங்கலாகி வந்தது. இந்நிலையில் அவர் எதிர்பாராதவிகபோபால் யூனியன் கார்பைடு விஷவாயு சம்பவத்தில் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் அப்துல் ஜபார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்