Published on 15/12/2022 | Edited on 15/12/2022

இருபது ரூபாய்க்காக நிகழ்ந்த சண்டையில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் இடவா நகரில் ரயில்வே டிராக்கை ஒட்டிய பகுதியில் கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் பொருள் ஒன்றை வாங்கி உள்ளார். அதற்கு 20 ரூபாய் கொடுக்க அந்த இளைஞர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இளைஞருக்கும் கடை ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. உடனடியாக அங்கு சுற்றி இருந்தவர்கள் இளைஞரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் பயந்த அந்த இளைஞர் அருகில் உள்ள தண்டவாளத்திற்கு ஓடி, ரயில் வரும் திசையை நோக்கி ஓடிய நிலையில், எதிரே வந்த ரயில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில் இளைஞர் தூக்கி எறியப்பட்டு உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.