நீங்க எல்லாம் சுதந்திரமான ராணி ஆகணும். இஷ்டம்போல நடக்கக்கூடிய உரிமை வேணும். உங்கள காப்பாத்திக்க உங்களுக்கு சக்தி வேணும் இன்னொருத்தர் வீட்டில போட்டு பூட்றது போல அடிமைத்தனம் வேற இல்லை. ஆம்பளைக்கு என்ன கேடு, அவன் எப்படியோ போறான் அதைப்பத்தி நமக்கென்ன கவலை. அவனுக்கு ஒன்னுமே தப்பில்லையே. அவன் சோறு தின்னாலும் சரி, வேற எதை தின்னாலும் சரி அதனால ஒன்னும் தப்பில்லைனு சொல்லிட்டாங்களே. அதனால அவன பத்தி நாம கவனிக்கவேண்டியது இல்லை. அவனை திருத்தவேணும்னா நாம துணியவேணும். இந்த கருத்தை வச்சுத்தான் நான் சொன்னேன், கல்யாணமெல்லாம் இனிமேல் கிரிமினல் ஆக்கப்பட வேண்டும்னு...
எதுக்காக கல்யாணம் பண்றோம், நிங்கதான் சொல்லுங்களேன். நீங்கெல்லாம் எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. யாருக்கு என்ன லாபம், உலகத்துக்கு என்ன லாபம். புருஷன காப்பாத்துனீங்க, அவன் கையை அமுக்குனீங்க, அவன் கால அமுக்குனீங்க, அவனுக்கு தண்ணீ ஊத்துனீங்க, சோறு போட்டீங்க. அவன் உதைச்சா, அடுச்சா பட்டுக்கிட்டீங்க. இவ்வளவுதான நீங்க பண்ணுனது, இதனால நாட்டுக்கு என்ன லாபம்...