Skip to main content

“குலக்கல்வியை கொண்டுவரும் முயற்சி தான் விஸ்வகர்மா திட்டம்” - சமூக செயற்பாட்டாளர் ஓவியா

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Social activist Oviya talks about the Vishwakarma project

 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பற்றி சமூக செயற்பாட்டாளர் ஓவியா நம்முடன் விரிவாக பகிர்ந்துகொண்டார். அவை..

 

மீண்டும் குலக்கல்வியை கொண்டுவரும் முயற்சி தான் விஸ்வகர்மா திட்டம். மோடியே இதை அப்படித்தான் சொல்லியிருக்கிறார். குரு-சிஷ்ய முறையிலான கல்வி முறையை பலப்படுத்தவும், பாரம்பரிய குடும்பத் தொழில்களை மேம்படுத்தவும் தான் இந்தத் திட்டம் என வெளிப்படையாகவே அவர் தெரிவித்துள்ளார். 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை தொழிலாளர்களாக வைத்து வேலை வாங்கக்கூடாது என்பது தான் சட்டம்.  குடும்பத் தொழில்களுக்கு உதவுகிற குழந்தைகளை தொழிலாளிகள் என்கிற வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்கிற சட்டத்திருத்தத்தை இவர்கள் கொண்டுவந்தனர். இந்த விஸ்வகர்மா திட்டம் வந்தபிறகு இதையும் அந்த சட்டத்திருத்தத்தையும் இணைத்துப் பாருங்கள். இவர்களுடைய நோக்கம் என்ன என்பது புரியும். ‘உன்னுடைய பிள்ளையைப் படிக்க அனுப்பாதே. குலத்தொழில் செய்ய வை. அரசாங்கம் உனக்கு கடன் வழங்கும்’ என்பதைத் தான் இவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். அனைவரும் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்று நம்முடைய சட்டத்தில் இருக்கிறது. 

 

பெண்களைப் படிக்க வைத்தால், திருமணத்துக்கு அரசு உதவி செய்யும் என்று கலைஞர் சட்டம் கொண்டுவந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்களைப் பள்ளிக்குள் அழைத்து வந்தது.  அதற்கு நேர் எதிரான வழிமுறையை பாஜக எடுக்கிறது. குழந்தைகளைப் படிக்க வைக்கவில்லை என்றால் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் என்று சொன்னால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிடுவார்கள். அதைத் தான் பாஜக விரும்புகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டின் பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் வடஇந்தியாவில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் குழந்தைகளைக் கல்வியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

 

கைத்தொழிலை வளர்ப்பது தான் உங்கள் நோக்கம் என்றால், குடும்பத் தொழில் என்கிற வார்த்தையை சேர்க்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது? சமுதாயத்தை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். அவர்களைப் பொறுத்தவரை மனுதர்மம் தான் உண்மையான தர்மம். சாதி என்பது ஒரு அழகிய சொல் என்கிறார் அன்புமணி ராமதாஸ். சாதிய அமைப்பு வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எதற்காக சாதி என்பது ஒரு அடையாளமாக இருக்க வேண்டும்? சாதியின் நோக்கமே ஏற்றத்தாழ்வு தான். விஸ்வகர்மா என்பதே ஒரு சாதிய சொல்லாடல் தான். ஏற்கனவே நடைபெற்ற நல்ல மாற்றங்களை சிதைத்து, பின்னோக்கி அழைத்துச் செல்வதற்கு தான் மத்திய அரசு முயற்சி செய்கிறது” என்றார்.

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.