Skip to main content

என்ன பேரு வைக்கலாம் கொடி எப்படி இருக்கனும் சொல்லுங்க... ரஜினியை ஏமாற்றியது யார்? வெளிவந்த தகவல்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

"நாளைக்கு தலைவரை பார்க்கப் போறீங்களா, போங்க, போங்க, இது தான் உங்களுக்கு தலைவரைப் பார்க்கும் கடைசி சந்தர்ப்பம். இப்ப இருக்கும் மா.செ.க்களில் ஒரு சிலரைத் தவிர அத்தனை பேரும் யோக்கியர்களா? யாராரு என்னென்ன திருட்டு, புரட்டு வேலைகள் பண்ணிருக்கீங்கன்னு தலைவருக்குத் தெரியும். அயோக்கியர்கள் அத்தனை பேரின் பதவிக்கும் தலைவர் வேட்டு வைக்கப் போறாரு.''

 

rajini



கடந்த 05—ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் கூட்டத்தை ரஜினி நடத்தியதற்கு முதல் நாள், இப்படியொரு வாட்ஸ்—அப் தகவல் ர.ம.ம. குருப்புகளில் பரவி குபீர் கிளப்பியது. திருவண்ணாமலை கேசவன் என்ற பெயரில் வெளியான இந்த தகவல் ரஜினியின் பார்வைக்கும் போனது. இந்த வாட்ஸ்—அப் தகவல் வேறுவித விளைவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற முடிவுடன் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து, கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா மண்டபத்திற்கு புறப்பட்டார் ரஜினி.


10 மணிக்கு கூட்டம் என்றாலும் காலை 8 மணிக்கே அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர் மா.செ.க்கள். மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்த மீடியாக்கள், மா.செ.க்கள் முன்பு மைக்கை நீட்டிய போது, "ஆளவிடுங்க சாமிகளா' என தெறித்து ஓடினார்கள். காலை 10.45 மணிக்கு மண்டபத்திற்குள் எண்ட்ரியானார் ரஜினி. வழக்கமாக ரஜினியின் இடதுபுறம் ர.ம.ம. தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர்தான் உட்கார்ந்திருப்பார். ஆனால் அன்றைய கூட்டத்திலோ மண்டப நிர்வாகி சிவா உட்கார்ந்திருந்தார். ரஜினியின் வலப்பக்கம் சற்று தள்ளி சுதாகர் உட்கார்ந்திருந்தார்.

 

 

rajini



எப்போதும் மாறாத புன்னைகையுடன் மா.செ.க்களிடம் நலம் விசாரித்த ரஜினி, எடுத்த எடுப்பிலேயே, "இந்தக் கூட்டத்தை கூட்டுவது பற்றி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கடிதம் எழுதினேன்.

அது உடனே டி.வி. மீடியாக்களில் ஃப்ளாஷ் ஆகுது. உங்களுக்கு ரகசியத்தைப் பாதுகாக்கத் தெரியல. சரி அதவிடுங்க, ரெண்டு வருஷமா மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதில் ரொம்பவே மந்தமாகிட்டீங்க. அதே மாதிரி மக்கள் பிரச்சனைக்காக ஏதாவது போராட்டம் பண்ணீருக்கீங்களா, போராட்டம் பண்ணலாமான்னு தலைமையிடம் அனுமதியாவது கேட்டீங்களா. சித்திரை ஒண்ணாம் தேதி கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு, இதோ உட்காந்திருக்காரே மதுரை ரஃபீக் சொல்றாரு. அப்படி எதுவும் நான் சொன்னேனா'' என ரஃபீக்கைப் பார்த்து ரஜினி கேட்டதும் கப்சிப்பாகிவிட்டார் ரஃபீக். இது போன்று இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் மா.செ.க்களை நோக்கி பறக்கவிட்டார் ரஜினி.


கட்சிப் பெயர், கொடி பற்றி அனைத்து மா.செ.க்களும் ஆர்வமுடன் ரஜினியிடம் கேட்ட போது, "என்ன பேரு வைக்கலாம், கொடி எப்படி இருக்கலாம்னு நீங்களும் யோசனை சொல்லுங்க'' என ரஜினி கொக்கியைப் போட்டதும், "அண்ணாத்த' என அசந்துவிட்டனர் மா.செ.க்கள். "இஸ்லாம் மதகுருமார்கள் என்னைச் சந்தித்த பின்தான் சி.ஏ.ஏ. குறித்த பல விஷயங்கள் எனக்கு தெளிவாக புரிந்தது. நீங்களும் உங்க ஏரியா ஜமாத் தலைவர்களை சந்திங்க, தெளிவுபடுத்துங்க. விரைவில் மீண்டும் சந்திப்போம்'' எனக் கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ரஜினி.

தூத்துக்குடி மா.செ. ஸ்டாலின் மட்டும், ரஜினியின் அனுமதியின் பேரில் மீடியாக்களைச் சந்தித்து தலைவர் எங்களிடம் பல விஷயங்களை விரிவாகப் பேசினார், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது'' என சுருக்கமாக சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

மக்கள் மன்றத்தினருடன் ரஜினி விரிவான ஆலோசனை, தேர்தலுக்கு ரெடியாகும் ரஜினி’ என மீடியாக்களில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கும் போதே, "இஸ்லாம் மத தலைவர்களுடன் நடந்த சந்திப்பு இனிமையாக இருந்தது. கட்சி ஆரம்பிப்பது பற்றி விரைவில் சொல்வேன். எனக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது. அதை பிறகு சொல்கிறேன்'' என போயஸ்கார்டன் வீட்டில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி.

என்ன ஏமாற்றம் என ரஜினி ஏரியாவில் சிலரை நாம் தொடர்பு கொண்ட போது,

"அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து ரொம்பவே யோசிக்கிறாரு. உறுப்பினர் சேர்ப்பு, பூத் கமிட்டி அமைப்பு போன்றவைதான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அப்படியே ஆரம்பிச்சாலும் இப்ப இருக்கும் 37 மா.செ.க்களில் 7 மா.செ.க்களுக்குத்தான் கட்சியில் மா.செ. பொறுப்பு கொடுப்பார். ஏ.சி.சண்முகத்தின் மகன் அருண்குமார், திருச்சி காங்கிரஸ் வி.ஐ.பி.அடைக்கலராஜின் மருமகன் பிரான்சிஸ், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், பொள்ளாச்சி மகாலிங்கத்தின் உறவினர் ஒருவர், சினிமா தயாரிப்பாளர் திருவண்ணாமலை தணிகைவேலின் உறவினர் எனப் பலரும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் மாநில-மாவட்ட பொறுப்புகளையும் தேர்தல் சீட்டையும் எதிர்பார்க்கின்றனர். இதுபற்றியும் ரஜினி தயக்கத்துடன் யோசிக்கிறார். 04—ஆம் தேதி நைட் சிங்கப்பூரிலிருந்து ராஜு மகாலிங்கம் வந்திருப்பதைப் பார்த்தா ஏதோ ஒரு முடிவுக்கு ரஜினி வந்துட்ட மாதிரி தெரியுது'' என்றனர்.

இந்த மாத இறுதியில் "அண்ணாத்த' ஷூட்டிங் முடிவடைகிறது. ஏப்ரலில் அப்படத்தின் ஆடியோ ரிலீஸ், அதற்கடுத்ததாக கமலின் தயாரிப்பு நிறுவனத்தின் படம் என சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ரஜினி, அரசியல் கமிட்மெண்டுகளையும் கமெண்டுகளையும் அவ்வப்போது ரிலீஸ் பண்ணுவார். வெற்றி 100% என்றால் அரசியலில் கலக்குவார் என்கிறார்கள்.

- து.ராஜா 

 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.