Skip to main content

மன்னிப்பு கேட்ட ஆக்ஸ்போர்டு!!

Published on 10/03/2018 | Edited on 10/03/2018


 

மன்னிப்பு கேட்ட ஆக்ஸ்போர்டு!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் "சர்வேதேச மகளிர் தினம்" அன்று பல்கலைக்கழகத்தில் உள்ள கிளாரன்டன் கட்டிட படிகளில் "ஹாப்பி இன்டர்நேஷனல் வுமென்ஸ் டே" என்று எழுதப்பட்டிருந்து. அதனை அங்கு துப்புரவு பணியில் இருக்கும் பெண் ஒருவர். அதனை தண்ணீர் வைத்து துடைத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 

இதனை அந்த பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாடு ஆசிரியராக பணிபுரியும் சோபி ஸ்மித்தான் தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது போன்ற செயல் பெண்களுக்கு எதிரானது, பெண்கள் தினத்தை அவமதிப்பதாகும் என்றெல்லாம் நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகளிடம் எதிர்ப்புகள் கிளம்ப, இதற்கு  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது டுவிட்டர் பக்கத்தில் "நாங்கள் இதற்கு மிகவும் வருந்துகிறோம், சர்வேதேச மகளிர் தினம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று இனி இதுபோல் நடக்காது" என்று பதிலளித்துள்ளது.

Next Story

2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ தேர்வு - அதன் பொருள் என்ன தெரியுமா?

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Rizz' chosen as the word of the year 2023...do you know what it means?

 

ஒவ்வொரு ஆண்டும் அந்தாண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிடும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டு மக்கள் மனநிலை ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில், 8 சிறந்த வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 8 வார்த்தைகளில் சிறந்த வார்த்தையை முடிவு செய்வதற்கு ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் இடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பின் முடிவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 12 மாதங்களில் இந்த ரிஸ் (Rizz) என்ற வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வார்த்தை, காதலை வெளிப்படுத்துதல் அல்லது கவர்ச்சிக்கான இணைய மொழியாக பெரும்பாலும் இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

 

ரிஸ் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம்: ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் இணையரை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது Charisma என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் (to Rizz up) என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம். 

 

 

Next Story

மகளிர் தின சிறப்பு பரிசு; ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'கே.ஜி.எஃப் 2' படக்குழு

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

kgf2 new poster released

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத்,  ரவீனா டாண்டன்   பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. 'கே.ஜி.எஃப்' படத்தில் மிரட்டலான ஹீரோ, வில்லன் என்ற ஆண் கதாபாத்திரத்திற்கு இணையான பவர்ஃபுல் பெண் கதாபாத்திரமும் உள்ளது. இப்படத்தில் வரும் பத்திரிகையாளர் மாளவிகா அவினாஷ், யாஷ் அம்மா அர்ச்சனா, கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரின் பாத்திரங்கள் பலரின் கவனத்தை பெற்றது. இருப்பினும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' படத்தின் இறுதியில் வரும் ரவீணா டாண்டனின்  ரஷ்மிக ஷென் கதாபாத்திரம் மாஸாக காட்டப்பட்டாலும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தில் தான் அந்த கதாபாத்திரத்திற்கான வலிமையான கதை இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெண்களின் வலிமை குடித்து வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.