Skip to main content

சமூகவலைதளங்களில் நிறைய நண்பர்கள் உள்ளவர்களா நீங்கள்..? அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு..

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

சமூகவலைதளங்களில் விராட் கோலி போடும் ஓரு போஸ்டிற்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என செய்திகளில் பார்த்திருப்போம். நாம்  ஃபாலோ செய்யும் சினிமா பிரபலமோ, விளையாட்டு வீரரோ, ஒரு பிராண்டின் பொருட்களுக்கு ப்ரோமொட் செய்வதை பார்த்திருப்போம். அப்படி செய்வதற்கு அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி தருகின்றன அந்த நிறுவனங்கள். ஆனால் சாதாரணமாக பொழுதுபோக்கிற்காக சமூகவலைதளம் பயன்படுத்தும் நாமும் இப்படி சம்பாதிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

 

mic

 

மார்கெட்டிங்கில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு விஷயம் ’நானோ இன்ஃப்ளூயன்சர்’(nano influence)  எனும் ஒன்று. தங்கள் பிராண்டின் ப்ரொமோஷனுக்காக பெரிய பிரபலங்களுக்கு அதிக தொகை கொடுக்கும் நிறுவனங்கள், அந்த செலவை குறைக்க எடுக்கும் முயற்சியே இந்த நானோ இன்ஃப்ளூயன்சர்கள். சமூகவலைதளங்களில், சாதாரணமாக ஒரு 1000 ஃபாலோவர்ஸ் கொண்ட ஒருவர் மூலம் தங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் பொழுது, அவரை ஃபாலோ செய்பவர்கள் அவரின் கருத்தை ஒரு விளம்பரமாக பார்க்காமல், ஒரு நண்பரின் அறிவுரையாகவே பார்ப்பார்கள். எனவே மக்களிடம் ஒரு நல்ல ரீச் கிடைக்கும் என்பதே பெரிய நிறுவனங்களின் லேட்டஸ்ட் ஐடியா.

 

மார்கெட்டிங்கின் வருங்காலம் என வர்ணிக்கப்படுகிற இந்த முறை அமெரிக்காவில் ஆரம்பித்து பிரபலமானது. இந்த முறை தற்போது இந்தியாவிலும் காலூன்ற ஆரம்பித்துவிட்டது. உங்களுக்கும் இதுபோல சமூகவலைத்தளங்களில் நிறைய நண்பர்கள் இருந்தால் வருங்காலத்தில் நீங்களும் கூட ஒரு மைக்ரோ இன்ஃப்ளுயன்சர் ஆகி வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்.