Skip to main content

81 வயதில் பிரதமர்... 4 வருடத்துக்கு ஒருமுறை பிறந்தநாள்! - தேசாய் எனும் மாமனிதன்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

fghj

 

1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு மிக முக்கியமான நாள். சுதந்திரம் அடைந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக பிரதமர் நாற்காலியை அலங்கரித்து வந்த நிலையில், இதோ நான் இருக்கிறேன், நீங்கள் விலகுங்கள் என்று அரியணையில் ஏறினார் ஒருவர். அவர் பிறந்த இடம் வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், வளர்ந்த இடம் கூட வளம் இல்லாமல் சராசரியாக இருக்கலாம். ஆனால், அவரின் நேர்மை இன்றளவும் இந்திய அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்றால் அதற்கு நம்மிடம் சரியான பதில் இருக்காது. ஆம், நேர்மையின் மறுஉருவம் அவர், அவர் வேறு யாரும் அல்ல காங்கிரஸ் கட்சியை முதன்முதலாக கூப்பில் அமர வைத்து, ஜனதா கட்சியன் சார்பாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய்தான் அவர். 

 

நேர்மையை அவரிடம் பிரதானப்படுத்த என்ன இருக்கிறது என்று கூட சிலர் கேட்கலாம், அதற்கு வலிமையான காரணம் இருக்கிறது. முன்பு ஒருமுறை அவர் பம்பாய் மாகாணத்தின் அமைச்சராக இருந்தபோது, அவரின் மகள் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடையவே, அவரின் மகள் மீண்டும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாரானார். இதற்காக தன் தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் உடனடியாக மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு சலுகை காட்ட வாய்ப்பிருப்பதாக அடுத்தவர்கள் நினைப்பார்கள் என்று கூறி மகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் வருத்தமடைந்த அவரின் மகள் தற்கொலை செய்துகொண்டார். தேசாயின் நேர்மைக்கு இது ஒன்றே போதுமான சாட்சியாக இருக்கும்.

 

தேசாய் அரசியல் வாழ்க்கை என்பது நேரு, காந்தி காலத்தில் ஆரம்பித்தது. நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அவர், எமர்ஜென்சியின்போது ரகசிய சிறையில் அடைக்கப்படார். கிட்டதட்ட 18 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். 1977ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் வெளியே வருகிறார், மார்ச் மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார் என்றால், அவர் சிறையிலும் அரசியல் செய்யாமல் இல்லை. அவர் பிரதமராக இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றினார். இன்றைக்கு குறைந்த விலையில் உணவு என்று எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் தேசாய் என்றால் அது மிகையல்ல. ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு என்ற திட்டத்தை அவர் கொண்டு வந்தார். அப்படி சாப்பாடு தர முடியாத ஓட்டல்களுக்கு அங்கீகாரம் தர முடியாது என்று அறிவித்தார். 

 

தங்கத்தின் விலையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். வரதட்சணை என்ற வார்த்தையே அவருக்குப் பிடிக்காது. தான் கலந்துகொள்ளும் திருமணங்களில் வரதட்தணை கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிந்தாலே அந்த திருமணத்துக்கு செல்லாமல் தவிர்த்துவிடுவாராம். ஒருமுறை அவர் தமிழகம் வந்தபோது ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய முடிவெடுத்து சென்றுள்ளார். 5 ரூபாய் கட்டணம் கட்டி வரிசையில் நின்றே அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். தன்னுடைய பதவியை தனக்கான லாப நோக்கத்திற்காக அவர் எப்போதும் பயன்படுத்தியதில்லை. இதனால்தான் என்னவோ நம்முடைய எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட, அந்நாட்டின் மிக உரிய விருதான நிஷான்- இ - பாகிஸ்தான் விருதினை அவருக்கு அளித்து கவுரவப்படுத்தியுள்ளது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார்.  

 

பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசுகளின் உரிய விருதுகளைப் பெற்ற இந்தியாவின் ஒரே முன்னாள் பிரதமர் என்றால் அது தேசாய் மட்டுமே. இதைவிட அவருக்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது. அவர் தன்னுடைய பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாடுவார். ஏனென்றால் அவர் பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்தவர். தன்னுடைய 98 வயது வாழ்க்கையில் 25 முறை கூட அவர் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தால் என்ன, அவர் சாதனைகள் இன்றளவும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறதே! இன்று அவரின் நினைவு நாள் என்பது கூடுதல் சிறப்பு.

 

 

Next Story

ஜெயலலிதாவின் சொத்துகளில் 50% பங்கு கோரி முதியவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு! 

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

Elderly case in High Court demanding 50% share in Jayalalithaa's assets!

 

ஜெயலலிதாவின் பாதி சொத்தைத் தனக்கு வழங்க வேண்டும் என்றும், தான் அவரது மூத்த சகோதரர் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முதியவர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

கர்நாடகா மாநிலம், மைசூருவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தந்தையின் முதல் மனைவியின் மகன் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியான ஜெயம்மா-வின் ஒரே வாரிசு நான். அதன் பிறகு, வேதவள்ளியை தனது தந்தை திருமணம் செய்துக் கொண்டதன் மூலம் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஜெயலலிதாவும், அவரது சகோதரர் ஜெயக்குமாரும் எனக்கு சகோதரர், சகோதரி என்று முதியவர் சொந்தம் கொண்டாடியுள்ளார். 

 

கடந்த 1950- ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு தனது தாய் ஜெயம்மா மைசூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் ஜெயலலிதா ஜெயக்குமார் மற்றும் அவர்களது தாய் வேதவள்ளி எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்ததாகவும் முதியவர் வாசுதேவன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஜெயக்குமார் இறந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான் தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஜெயலலிதாவின் சொத்துகளில் 50% பங்கு எனக்கு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

 

Next Story

இந்தியாவுக்கும், ஷின்சோ அபேவுக்குமான உறவு குறித்து விரிவான தகவல்! 

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

Detailed information about the relationship between India and Shinzo Abe!

 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவின் நெருங்கிய நண்பராகவே இருந்துள்ளார். இந்தியா, ஜப்பான் உறவை அடுத்தகட்டத்திற்கு மிக வேகமாக எடுத்துச் சென்றவர் ஷின்சோ அபே என்றால் அது மிகையாகாது. சீனா எதிர்ப்பு, வலுவான தேசியவாத கொள்கை, அமெரிக்கா நெருக்கம் உள்ளிட்டவை அவரை இந்தியாவோடு இன்னும் நெருக்கமாக்கியது ஜப்பான் போன்ற இந்தியா தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளை குவாட் அமைப்பின் மூலம் ஒன்றிணைப்பதில் அபே முக்கிய சக்தியாக இருந்தார். 

 

பிரதமர் நரேந்திர மோடியுடன் அபேவின் நெருக்கம், மிக முக்கியமானது எந்த அளவிற்கென்றால், ஜப்பான் சென்றிருந்த போது, அபே தனது குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய வீட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளித்தார். வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அங்கு விருந்தளித்தது அதுவே முதல்முறை. 

 

கடந்த 2017- ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனப்படைகள் மோதிக் கொண்ட போதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போதும், இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஜப்பான் எடுத்தது. மேலும், சீனாவின் நடத்தைக் குறித்து பகிரங்கமாக விமர்சித்த ஜப்பான், எல்லையில் பழைய திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியது. 

 

பல ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகரித்தன. ஜப்பானில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆணையத்துடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அடிக்கடி ஆலோசனை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்திய கடற்படையும், ஜப்பானிய கடற்படையும் கடந்த 2013- ஆம் ஆண்டு சென்னை அருகே கடலில் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இப்படி இருநாட்டு உறவுக்கும் பாலமாக இருந்தவர் ஷின்சோ அபே.