Skip to main content

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கண் அசைவில் கு.ப.கிருஷ்ணன்! தவிக்கும் அதிமுக பிரபலங்கள்! 

Published on 10/06/2020 | Edited on 11/06/2020
eps



கு.ப.கிருஷ்ணன் ஶ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர். திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நபராக இருக்கிறார். 


திருச்சியில் தற்போது இந்த சமூகத்தில் இருக்கும் அதிமுக முக்கிய பிரபலங்கள் பரஞ்சோதி, கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி, அண்ணாவி, லால்குடி. எஸ்.எம்.பாலன், சிவபதி, பிரின்ஸ்தங்கவேல், செல்வராஜ், பரமேஸ்வரி என பெரிய பட்டியலே உள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில் இவர்கள் அனைவருக்குமே ஜெ. பல முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தங்களுடைய பதவியை இழந்திக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கு.ப.கிருஷ்ணனிடம் அரசியல் பாடம் கற்றுக்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது. ஜெயலலிதா, அதிமுக சீனியரும் ஒருங்கிணைந்த மா.செ.வாகவும் இருந்த ரத்தினவேலை அதிமுக புறநகர் மா.செ.வாக நியமித்தார்.
 

 

gggg



ஜெ.வினால் நேரடியாக ஒரங்கட்டப்பட்ட என்.ஆர்.சிவபதி, சில காலம் அமைதியாக இருந்து விட்டு எடப்பாடி பழனிசாமி வந்தவுடன் அவரும் நானும் மாமா, மாப்பிள்ளை என  பேசிக்கொள்ளும் பழக்கம் என பெருமையாக பேசிக்கொண்டு கரோனா காலத்திலும்  வீட்டை விட்டு வெளியே வராமல் அடுத்த மா.செ. நான்தான் என  புறநகர் அதிமுக அரசியலை அவ்வப்போது குழப்பிக்கொண்டு இருக்கிறார்.  இதனாலயே புறநகர் நகர் பகுதியில் அவ்வப்போது சில கோஷ்டி சிக்கல் ஏற்பட்டாலும் மா.செ. ரத்தினவேல் பழைய அனுபவத்தின் துணையோடு  சாதி அரசியலில் சிக்காமல் சிக்கலை சமாளித்து வருகிறார்.

எம்.பி. தேர்தலுக்கு முன்பு  அதிமுகவில் உள்ள அந்த சமூகத்தை சேர்ந்த பிரமுகர்களும், அமைச்சர் வளர்மதி தலைமையில் ஒருங்கிணைந்து எங்கள் சமூகத்திற்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ உங்களில் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று சொல்ல, அந்த ஒருவர் யார் என்பது தற்போதுவரை குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.


இந்த நேரத்தில் திருச்சி மாநகர அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திமுக கே.என்.நேருவுக்கு எதிராக அரசியல் செய்வதில் தடுமாற்றம் கொண்டிருப்பதால்தான் எடப்பாடி பழனிசாமியின் கண் அசைவிலுள்ள முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் காந்தி மார்கெட் – கள்ளிக்குடி மார்கெட்,  அரசியலை கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக கட்சியின் உயர் மட்டத்தில் உள்ள தலைவர்கள்.  
 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.