Skip to main content

யூ-டியூப் சேனல் ஆரம்பிக்கும் விஜய்யின் இயக்கம்! 

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

vijay makkal iyakkam

 

தமிழ் சினிமாவில், அதிக ரசிகர்களைக் கொண்ட நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் தனது ரசிகர் மற்றும் நற்பணி மன்றங்களை 2009 -ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார். இம்மக்கள் இயக்கத்திற்கு, 'விஜய் மக்கள் இயக்கம்' எனப் பெயரிடப்பட்டது.

 

விஜய் மக்கள் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும் மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கம், அதிகாரப்பூர்வமாக யூ-டியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.

 

இதனை, விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இனி, நடிகர் விஜயின் முடிவுகள், அவரைப்பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் ஆகியவை, இந்த யூ-டியூப் சேனலில் தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்