Skip to main content

'அது நாங்க இல்ல...'2.0' குறித்து தமிழ்ராக்கர்ஸ் விளக்கம் 

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
tr

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள '2.0' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும் என்று தமிழ்ராக்கர்ஸின் ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'அந்த ட்விட்டர் கணக்கு தங்களுடையது இல்லை என்றும், எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் தாங்கள் இல்லை, வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் என தமிழ்ராக்கர்ஸ் தங்களது இணையதளத்தில் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ரூ.543 கோடியில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்