Skip to main content

குளியலறையில் கிடந்த உடல்; தலையில் காயம் - சடலமாக மீட்கப்பட்ட 'தெகிடி' பட நடிகர்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
actor Pradeep K. Vijayan passed away

பிரபல நடிகர் பிரதீப் கே.விஜயன்  வீட்டில் சடலாமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தில் பெரும் சோதக்கதை ஏற்படுத்தியுள்ளது.

தெகிடி, டெடி, லிப்ட் போன்ற படங்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் கே.விஜயன்.  சென்னை பாலவாக்கத்தில் வசித்து வரும் இவர் இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே பிரதீப் கே.விஜயனின் நண்பர்கள்  அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்ப்புகொண்டுள்ளனர். ஆனால், யாரும் அந்த அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் உதவியுடன் பிரதீப்  கே.விஜயன் வீட்டிற்கு  சென்றவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது, குளியலறையில் பிரதீப் கே.விஜயன் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீப் கே.விஜயன் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் தனியாக வசித்து வரும் அவருக்கு, ஏற்கெனவே மூச்சு திண்றல் இருந்ததாக  கூறப்படுகிறது. மேலும் குளியலறையில் கிடந்த பிரதீப் கே.விஜயனின் தலையில் காயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மரணம் குறித்து உறுதியான  தகவல் வெளிவரவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்