Skip to main content

நடு சாலையில் காரை வழிமறித்து தாக்குதல்; கொள்ளை முயற்சி தொடர்பான பகீர் வீடியோ

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Attack by overtaking a car in the middle of the road; Bagheer video related to robbery attempt

கோவையில் நடு சாலையில் காரை மறித்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மதுக்கரை எல்என்டி பைபாஸ் அருகே இரவு நேரத்தில் கேரள பதிவெண் கொண்ட காரை நடுசாலையிலேயே கார் ஒன்று வழிமறித்து நின்றது. திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் சிலர் வழிமறிக்கப்பட்டு நின்ற வானகத்தில் இருந்தவர்களை கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.

மர்ம நபர்கள்  தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காட்சிகள் காரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. கார் டிரைவர் துணிச்சலாக செயல்பட்டதால் கொள்ளையர்களின் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் நடக்கும் சம்பவம் போன்றே கோவையில் நிகழ்ந்த சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாராய வேட்டையில் சிக்கிய வெளிமாநில மது பாட்டில்கள்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி பெண்ணாபுரம் பிரிவு பகுதியில் கடந்த 22ஆம் தேதி மதுவிலக்கு போலீசார ஆய்வு செய்த பொழுது சரக்கு வாகனத்தில் வெளி மாநிலம் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அது தொடர்பாக 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இப்படியாக பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 வெளிமாநில மது பாட்டில்களும் அவற்றை விற்க முயன்றவர்களும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

கால்வாய் அமைக்கும் போது சுவர் இடிந்து விபத்து; தொழிலாளி உயிரிழப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Wall collapse accident during construction of canal; Worker casualties

கோவையில் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது சுவர் இடிந்து விழுந்து ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள வடக்கு வீதியில் 200 மீட்டர் தொலைவிற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியை இன்று ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மூடும் பணி நடைபெற்று வந்தது. இதற்கான பணியில் வேல்முருகன் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பழைய திருமண மண்டபம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியை மூடி கொண்டிருந்த பொழுது திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர் வேல்முருகன் சிக்கிக்  கொண்டதாக பேரூர் காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருடன் சேர்ந்து நீண்ட நேரமாக சரிந்து விழுந்த சுவற்றுக்குள் சிக்கிய பணியாளர் வேல்முருகனை மீட்க முயன்றனர். ஆனால் இறுதியாக வேல்முருகன் சடலமாக மீட்கப்பட்டார். எப்போதுமே  கால்வாய் அமைக்கும் பணியில் 20 பேர் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இன்று கால்வாயை மூடுவதற்கான நிறைவு பணி என்பதால் சிலர் மட்டுமே பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

கால்வாய் மூடும் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.