Skip to main content

"தப்பா நினைக்காதீங்க, நானும் சாமி கும்புடுறவன்தான்" - கண் கலங்கிய சூரி

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

soori said my speech has been misunderstood viruman audio launch

 

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில்  கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில், "1000 கோவில் கட்டுவதைவிட, 1000 அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல நூறு ஆண்டுகள் பேசும். அதை சூர்யா அண்ணன் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்" என்று பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

 

இந்நிலையில் இப்படத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சூரி, "மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் 1000 கோவில்கள் கட்டுவதை விட ,ஏழைக்கு ஒரு கல்வி கொடுப்பது இன்னும் சிறப்பானது என்று சொல்லியிருந்தேன். நான் அதை யாரும் மனதையும் புண்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. கோவில்களுக்கு எதிரானவன் நான் இல்லை. நான் சாமி கும்பிடுறவன்தான். மதுரை மீனாட்சி அம்மனோடு தீவிர பக்தன். அதனால்தான் என்னுடைய ஹோட்டல்கள் அனைத்திற்கும் அம்மன் பெயரையே வைத்திருக்கிறேன். அப்படி இருக்கையில் நான் எப்படி கோவில்களை பற்றி தவறாக பேசுவேன்.

 

அன்றைக்கு கல்வியை ஒரு சிறப்பான விஷயம் என்று சொல்வதற்காக தான் அப்படி பேசினேன். ஆனால் அதை சிலருக்கு தவறாக புரியப்பட்டுருக்குன்னு நினைக்கிறேன். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் எந்த கோவிகளுக்கும் எதிரானவன் அல்ல. நான் படிக்காதவன் எனக்கு படிப்பு கம்மி, படிக்காதவன் என்றதால நிறைய இடங்களில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்படுவதால் மனசு உடைந்து போகிறேன். அதனால் எல்லாரும் நல்லா படிக்கணும். இதை நான் சொல்லவில்லை, அன்று கல்வியின் உள் நோக்கத்தை உணர்ந்து மகாகவி பாரதியார் சொன்னார். அதைத்தான் மதுரையில் நானும் சொன்னேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். நானும் சாமி கும்புடுறவன்தான். நான் இப்பவும் சொல்றேன் அனைவருக்கும் கல்வி வேண்டும்" எனத்  தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.