
90களில் கதாநாயகியாக கலக்கிய சிம்ரன் பின்பு ஒரு கட்டத்தில் இருந்து இப்போது வரை முக்கிய மற்றும் துணை கதபாத்திரரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்பு சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை லண்டனில் பார்த்து ரசித்தார்.
இந்த நிலையில் சென்னை வந்துள்ள சிம்ரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்[போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் பதிலளிக்கையில், “டூரிஸ்ட் ஃபேமிலி நல்ல வெற்றியடைஞ்சிருக்கு. குட் பேட் அக்லியும் அப்படித்தான். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. என்னுடைய ஆடியன்ஸுக்கும் ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய 30 வருஷ கரியரில் இதுதான் எனக்கு நடந்த சிறந்த விஷயம்.
இப்ப இருக்கிற ஆடியன்ஸ் ரொம்ப ஓபன் மைண்டடா இருக்காங்க. பெண்களை மையப்படுத்தி வரும் சப்ஜெட்டுக்கு வரவேற்பு கொடுக்கிறாங்க. அது மாதிரியான படங்களில் நடித்தால் நிச்சயம் ஏத்துக்குவாங்க. அதற்கு கதை தான் முக்கியம்” என்றார். பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்தான கேள்விக்கு, “நான் விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிக்குறேன். குட் லக்” என்றார். பின்பு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இது ஒரு கஷ்டமான சூழ்நிலை. எல்லாம் சரியாகிவிட வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன். இதில் மனிதநேயம் தான் ஜெயிக்க வேண்டும்” என்றார். பின்பு அஜித் பத்ம பூஷன் தொடர்பான கேள்விக்கு, “அவர் அந்த விருதுக்கு தகுதியானவர் தான். அவர் வாங்கினது மகிழ்ச்சியா இருக்கு” என்றார்.