Skip to main content

வில்லனாக மிரட்டும் ஃபகத் பாசில்... வைரலாகும் போஸ்டர்!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Fahadh Faasil

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

 

இப்படத்தின் முதல் பாகத்தை கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியிட முடிவெடுத்துள்ள படக்குழு, அதற்கேற்ப பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் ஃபகத் பாசிலின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில், பன்வார் சிங் செகாவத் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக ஃபகத் பாசில் நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.     

 

 

சார்ந்த செய்திகள்