Skip to main content

நவம்பரில் நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம்... சினிமாவிலிருந்து பிரேக்கா?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 
 

nayantara vignesh shivan

 

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்துக்கொண்டிருந்தபோது இவ்விருவருக்கும் காதல் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டு அடுத்த வருட தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் ஹீரோயினாக இருப்பது நயன்தாராதான். சம்பளத்தையும் ரூ. 4 கோடிக்கு மேல் வாங்குகிறார். வயது 34 தொட்டுவிட்டது என்பதால் நயன்தாரா வீட்டில் விரைவில் திருமணத்தை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களாம். அதனால் கைவசம் இருக்கும் படங்களுக்கு நவம்பர் மாதத்திற்குள் நடித்து கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
 

சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய படம் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்