Skip to main content

நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த...தலைமை மீது கொந்தளிப்பில் அ.தி.மு.க. தொண்டர்கள்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

சமீபத்தில் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்தை இரண்டுமுறை முற்றுகையிட்டு போராடினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வும், தி.நகர் எம்.எல்.ஏ.வுமான சத்யா... எழுநூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வகித்து வந்த பதவிகளை ஒரே இரவில் மாற்றி உத்தரவிட்டார். அதில் பலர் எம்.ஜி.ஆர். காலத்து கட்சிக்காரர்கள். அவர்கள் பதறினார் கள். கதறினார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பலர் வீடுகளுக்கும் படையெடுத்தார்கள். அ.தி. மு.க. தலைமைக் கழகத்தை முற்றுகையிட் டார்கள். அவர்களில் நான்குபேர் தீக்குளிக்கவே முயன்றார்கள். மா.செ. சத்யா செய்த அத்துமீறல்களை வெளிப்படையாகவே ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

 

admkமறுபடியும் தலைமைக் கழகத்திற்கு ஊர்வலமாக வந்தார்கள். இந்தமுறை தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு ""நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்'' என எச்சரித்தது. நொந்துபோன அவர்கள் தலைமை நிலைய அலுவலரான மகாலிங்கத்திடம் மனு கொடுத்துவிட்டு "சத்யா ஒழிக' என கோஷமிட்டுவிட்டுச் சென்றார்கள். நீண்டகால அ.தி.மு.க.வினரின் பதவியைப் பிடுங்கும் சத்யாவின் தெம்புக்கு காரணம், முதல்வர் எடப்பாடிக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் அவர் நெருக்கமாக இருப்பதுதான் என வருத்தப்படுகிறார்கள் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
 

admkசத்யா சென்னை மாநகராட்சியில் செல்வாக்காக இருக்கிறார். சென்னை நகரம் முழுக்க சூதாட்ட விடுதிகள், மசாஜ் கிளப்புகள் நடத்து பவர்களுக்குத் துணையாக நிற்கிறார். அவருக்கு உள்ளாட்சித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் துணையாக நிற்க அமைச்சர் வேலுமணி உதவி செய்கிறார். வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எடப்பாடியிடம் மட்டுமின்றி, டெல்லியில் மோடிவரை செல்வாக்குடன் உள்ளனர். இந்த அதிகார செட்-அப் பில்தான் அ.தி.மு.க. இயங்குகிறது. அதனால் அ.தி.மு.க. மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைவரும் கல்லா கட்டுகிறார்கள். மத்தியில் உள்ள மோடி அரசும் லகானை தன் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.


ஓ.பி.எஸ். தலைமையிலான அணியை முற்றிலுமாக ஒழித்துவிட்டார் எடப்பாடி. ஒரு எம்.எல்.ஏ. கூட இன்று ஓ.பி.எஸ். வசம் இல்லை. அமைச்சர் மணிகண்டனின் பதவியை எடப்பாடி பறித்ததுகூட ஓ.பி.எஸ்.ஸுக்கு விடப்பட்ட எச்ச ரிக்கையே. எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்.ஸை அவைத் தலைவராக்கிவிட்டு, பொதுச்செயலாளராக எடப்பாடி வருவதற்கான எல்லா ஆயத்த வேலைகளையும் எடப்பாடி முடுக்கி விட்டுள்ளார். அதனால்தான் சசிகலாவை நீக்குவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு கூடிய பொதுக்குழுவையும் செயற்குழுவையும் தேர்தல் கமிஷன் உதவியோடு கூட்டாமலிருக்கிறார்'' விவரிக்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்.

"அதேநேரத்தில் எடப்பாடி இடத்தைப் பிடிக்கவும், தன்னிச்சையாக செயல்படவும் சீனியர் அமைச்சர்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கு டெல்லி துணையும் இருக்கிறது. இது ஈகோ போட்டியாக மாறுகிறது. வேலுமணி, மழைநீரைப் பற்றி டி.வி. விளம்பரத்தில் வந்தவுடன் எடப்பாடி யும் அதேபோல் வீடியோ வெளியிட்டார். மின்துறை விவகாரங்களில் எடப்பாடிக்கு அனுமதி இல்லை. அதேபோல் உள்ளாட்சித் துறையில் எடப் பாடி நுழையவே முடியாது. செங்கோட்டையனின் கல்வி, விஜயபாஸ்கரின் சுகாதாரம் போன்றவை முதல்வர் நுழைய முடியாத துறைகள்' என உள்ளே நடக்கும் மோதல்களையும் சொல்கிறார்கள். 
 
 

Next Story

'தமாகா நிர்வாகிகள் ராஜினாமா செய்வதன் காரணம் இதுதான்'-விளக்கம் கொடுத்த விடியல் சேகர்  

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Vidyal Shekhar explains 'resignation is for party reform

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப வேண்டும். மாதாந்திர கட்டணத்தை மாற்றி மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் மின்சார துறையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர், 'தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருவது குறித்த சர்ச்சைக்கு, கட்சியின் நிர்வாக சீரமைப்பிற்காக அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை என்பது கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள இயல்பான ஒன்று என்பதால் இதில் அரசியல் எதுவும் இல்லை என கூறிய அவர், புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் விரைவில் வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.