Skip to main content

யாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை! சிலாகித்த ஜேம்ஸ் வசந்த்!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

சுப்ரமணியபுரம் படம் மூலமாக இசையமைப்பாளரா அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதற்கு முன்பே தமிழ் மக்களுக்கு டிவி நிகழ்ச்சிகள் மூலம் பரிச்சையமாகி இருந்தார். அவர் தனது பேஸ்புக்கில் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 

james vasanthan

 

 

“நேற்று ஒரு தமிழக அமைச்சரின் அலுவலகத்தில் அவருடன் பெரிய மீட்டிங்ல் இருந்தேன். அப்போதுதான், யாருக்கும் தெரியாமல், எந்த சத்தமும் இல்லாமல், இசைக்காகவும், இசைக் குடும்பத்திற்காகவும், ஏ.ஆர்.ரஹ்மான் எந்தளவிற்கு விடாமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரிய வந்தது. 

அவர் கனவு கண்டு வைத்துள்ள பல திட்டங்களுக்கு உதவி வேண்டி, அவர் தமிழக அரசாங்கத்தை அணுகியிருக்கிறார். அனைத்துமே நீண்டகால திட்டங்கள். அவை அனைத்தையும் பார்க்க அவர் தலைமுறையே கூட இல்லாமல் போகலாம். ஆனால், அவருடைய கனவுகளும் அதை அத்தனை உறுதியாக அவர் முன்னெடுக்கும் விதம் ஆச்சரியப்படுத்துகிறது.

உங்களில் சிலருக்கு  ‘சன்ஷைன் ஆர்செஸ்ட்ரா’ பற்றி தெரிந்திருக்கும். குப்பங்களில் இருந்தும், கஷ்டப்படுகிற சமூகத்தில் இருந்தும் வருகிற சிறு வயது இசைக் கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு ம்யூகிக் க்ரூப் அது. ஒருகாலத்தில் யாராலும் கண்டுக்கப்படாம, தீண்டத்தகாதவர்களாக இருந்த பசங்களை இப்போ ஊரே கொண்டாடுகிற இசைக்கலைஞர்கள். அரசாங்க பள்ளிகளில் படித்துக்கொண்டே, ஒவ்வொரு நாளும் ஸ்கூல் முடிந்தபின், ரஹ்மானோட ம்யூசிக் ஸ்கூலுக்கு ரிகர்சலுக்காக இந்த பசங்க ஓடுகின்றனர்.

அவர்களை தேர்ந்தெடுத்து, இப்போது வரைக்கும் உயர் வகுப்பினருக்கு மட்டுமே கிடைக்கின்ற வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசையை, அவர்களுக்கு சொல்லி தருகிறார் ரஹ்மான். அவரகள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்த ஏற்படுத்தியிருக்கிறார் ரஹ்மான். 

அவர் செய்துக்கொண்டு இருக்கின்ற வேலைகளில் இது ஒரு சோற்று பதம்தான். சமூகத்தில் இருந்து அவருக்கு கிடைத்ததை விட அதிகமாக அவர் சமூகத்திற்கு கொடுத்துக்கொண்டு இருக்கார். இது போன்ற ஒரு விஷயத்தை இதுவரை யாரும் பண்ணவில்லை. அவர் பல உயரங்கள் போய்க்கொண்டே இருப்பதிலும், மேலும் மேலும் வலிமையாக்கொண்டே செல்வதிலும், லட்சக்கணக்கான மக்கள் அவரை ஒரு ரோல் மாடலா பார்பதிலும் எந்த ஆச்சர்யமும் இல்லை. 

Keep going ARR” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நட்புக்கு முக்கியத்துவம்; ரைட்ஸ் வாங்கி பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் பாடல்! 

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
 nanban oruvan vantha piragu press meet 

புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அனந்த் ராம், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளித்தனர். இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முஸ்தபா பாடலை பயன்படுத்தியிருக்கிறீர்களே அதற்கு முறையாக ரைட்ஸ் வாங்கியிருக்கிறீர்களா? ஏன்னா இளையராஜா இப்பெல்லாம் ரைட்ஸ் கேட்கிறாரே அதற்காகத்தான் கேட்கிறோம் என்ற கேள்வியை முன் வைத்தனர்.

அதற்கு படக்குழுவினர், “முறையாக இசையமைப்பாளரை அணுகினோம். இந்தப் படத்தில் பயன்படுத்திய பாடல் அலை ஓசை ரெக்காட்ஸ் என்கிறவர்களிடம் இருந்தது. அவர்களிடமிருந்து ரைட்ஸ் வாங்கித்தான் பயன்படுத்தியுள்ளோம்” என்றனர். மேலும், இப்படத்தின் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளனர் என்றார்கள்.

Next Story

 பிரபல இசையமைப்பாளரின் குரலில் வெளியான தனுஷ் படப் பாடல்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
dhanush raayan second sinlge released

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ கடந்த 9ஆம் தேதி வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். ஒரு திருவிழா பின்னணியில் ,அமைந்திருந்த இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல்  ‘வாட்டர் பாக்கெட்’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். கானா கதிர் என்பவர் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடல் சந்தீப் கிஷனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் கானா காதல் பாடலாக வெளியாகியுள்ளது.